உதயநிதிக்கு தகுதி இருக்கா; வாக்கெடுப்பு நடத்தட்டும் பார்க்கலாம்; அமைச்சர் நிர்மல்குமார்
27 ஆடி 2026 திங்கள் 10:01 | பார்வைகள் : 181
திமுகவிற்கு தலைமை தாங்கும் தகுதி உதயநிதிக்கு இருக்கிறதா? திமுகவில் கனிமொழியா? உதயநிதியா? என வாக்கெடுப்பு நடத்த தயாரா?'' என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:
இளைஞர்கள் போராட்டம் இந்தியா முழுவது நடந்து கொண்டு இருக்கிறது. அதில் இளைஞர்கள் எல்லாம் போராட்டம் பண்ணி கொண்டு இருக்கிறார்கள். ஒரு சில பேர் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும் என்றும், ஒரு சில பேர் நீட் தேர்வு வேண்டாம் என்றும் சொல்கின்றனர். இதில் திமுக தேவையில்லாத வேலை செய்கிறது.
உதயநிதிக்கு யாரோ தவறாக அட்வைஸ் செய்கின்றனரா என்று தெரியவில்லை.ஜென்சினா- டிஎம்கே என்று டிசர்ட் போட்டு அங்கே, அங்கே இரண்டு இரண்டு பேரா, நான்கு நான்கு பேரா 200 ரூபாய் கொடுத்து உட்கார வைத்து இருக்கிறார்கள். முதலில் உதயநிதி ஜென்சினா என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். 4 பேர் சொல்லி கொடுக்க வேண்டும். இந்த மாதிரி கோமாளிதனமான வேலையை விட்டு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும்.
முதலில் உதயநிதிக்கு சுயபரிசோதனை செய்ய வேண்டும். சென்னையில் நடந்த நீட் போராட்டத்திற்குள் புகுந்து திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. திமுகவிற்கு தலைமை தாங்கும் தகுதி உதயநிதிக்கு இருக்கிறதா? திமுகவில் கனிமொழியா? உதயநிதியா? என வாக்கெடுப்பு நடத்த தயாரா? வாக்கெடுப்பு நடத்தட்டும் பார்க்கலாம். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire