தொடர் நாயகன் விருது பெற்ற வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி
27 ஆடி 2026 திங்கள் 17:39 | பார்வைகள் : 145
வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் ஆட்டநாயகன், தொடர் நாயகனை விருதுகளை பெற்றது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.
இந்தத் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) இரண்டு அரைசதங்களுடன் 151 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி போட்டியில் 81 ஓட்டங்கள் விளாசியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் அவர் பெற்றார்.
இதுகுறித்து பேசிய சூர்யவன்ஷி, "நாங்கள் ஹராரே வந்த பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்களில் எங்கள் பயிற்சி மிகவும் சிறப்பாக இருந்தது.
நான் இங்கு 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்திலும் விளையாடியுள்ளேன். எனவே, இந்த மைதானத்தில் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன். அணித்தலைவர், பயிற்சியாளர்கள் என அனைவரும் எனக்கு ஆதரவளித்தனர் - அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
எனது ஆட்டம், நான் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதைப் போன்றதுதான். நான் அணிக்காக அதை செய்ய முயற்சித்தேன்.
மூன்று போட்டிகளிலும், அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுக்க முயன்றேன். எனக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைத்தால், அந்த இன்னிங்ஸை இன்னும் பெரிதாகக் கொண்டு செல்லவே விரும்புவேன்.
அதுதான் எனது ஒரே அணுகுமுறையாக இருந்தது. நான் ஆடும் ஷாட்கள், நான் பயிற்சி செய்யும் ஷாட்கள்தான். பயிற்சி அமர்வுகளில் நான் என்ன செய்கிறேனோ, அதை அப்படியே போட்டியிலும் செய்ய முயற்சிக்கிறேன்.
இது உண்மையிலேயே ஒரு கனவு நனவான தருணம். எனது முதல் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire