புனிதப் போருக்கு அழைப்பு விடுத்த மொஜ்தபா கமேனி
28 ஆடி 2026 செவ்வாய் 07:21 | பார்வைகள் : 254
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி, லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்குத் தமது நாட்டின் அசைக்க முடியாத ஆதரவை வழங்கியுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலுக்கு எதிரான அவர்களின் உறுதியான நிலைப்பாட்டிற்காக அவர்களைப் பாராட்டியுள்ளார்.
மேலும், லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதோடு, அமெரிக்காவுடனான ஈரானின் மோதலும் முடிவுக்கு வரும் என பதிவு செய்துள்ள மொஜ்தபா கமேனி, புனிதப் போர் மற்றும் எதிர்த்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அறிவித்தார்.
ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் ஷேக் நைம் காசிம் மற்றும் அந்த அமைப்பின் போராளிகள் அனைவருக்குமான ஒரு செய்தியில் பதிவு செய்த கமேனி, லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளைப் பாதுகாப்பதை ஒரு முக்கிய உத்திசார் கடமையாகக் கருதுவதாகவும்,
அமெரிக்காவுடனான ஈரானின் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நிபந்தனையாக, லெபனான் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முழுமையாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இஸ்லாமியக் குடியரசுக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதியளித்து ஹிஸ்புல்லா அமைப்பு எழுதிய கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஈரானியத் தலைவர் கமேனி பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் மற்றும் உயிர்களையும் தலைமுறைகளையும் அழித்தொழிக்கும் கொடூர சியோனிஸ்டுகளின் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறையால் உலகின் பல நாடுகள் சோர்வடைந்துள்ள நிலையில், புனிதப் போர் மற்றும் எதிர்ப்பைத் தவிர வேறு எந்த வழியும் எஞ்சியிருக்கவில்லை என கமேனி பதிவு செய்துள்ளார்.
மேலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக புனிதப் போரில் ஈடுபட்டுள்ள குழுக்களின் முன்னோடியாக, லெபனான் ஹிஸ்புல்லா படைகள் ஒரு தளராத பாறையாக நின்றுள்ளது என்று கமேனி பாராட்டியுள்ளார்.
உலகளாவிய ஆணவத்திலிருந்து விடுபடுவதற்கான உலகின் சுதந்திர நாடுகளின் போராட்டத்திற்கு, இந்த உறுதியான நிலைப்பாடு ஒரு ஊக்கமளிக்கும் செய்தியாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லாவின் படைகள், முன்னாள் போராளிகள், இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்கள் ஆகியோருக்காகப் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்ட அவர், அவர்களின் இறுதி வெற்றி குறித்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire