Paristamil Navigation Paristamil advert login

உலகின் அதிவேகமாக முன்னேறும் நாடுகளில் இலங்கை 4வது இடம்

உலகின் அதிவேகமாக முன்னேறும் நாடுகளில் இலங்கை 4வது இடம்

28 ஆடி 2026 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 166


உலகின் அதிவேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி இலங்கை இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய அறிக்கையின்படி, அதிவேகமாக வளரும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

வியட்நாம் முதலிடத்தையும், பெலிஸ் இரண்டாமிடத்தையும், மொசாம்பிக் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டு உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை இதுவரை விரைவான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.

கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசைகளிலும் இலங்கை 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.