விண்வெளியில் இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை!
23 கார்த்திகை 2019 சனி 16:33 | பார்வைகள் : 15568
விண்வெளியில் இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் உள்ள காஸ்மிக் ரே டிடெக்டர் என்ற கருவியின் குளிரூட்டும் முறையை சரிசெய்து புதுப்பிக்கும் பணியில், சிறப்பு பயிற்சி பெற்ற ஆண்ட்ரூ மார்கன் மற்றும் லுகா பர்மிடனோ ஆகிய இரு விண்வெளி வீரர்கள் ஈடுபட்டனர்.
6 மணி நேரம் 33 நிமிடங்கள் இந்த பணியானது நீடித்தது. அப்போது கத்திரிக்கோல், கம்பி வெட்டிகள் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, வெற்றிடத்தில் இரும்பு பொருட்களை வெட்டி அகற்றி கோளாறு சரிசெய்யப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire