Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக Zinédine Zidaneஐ வரவேற்ற எம்பாப்பே!!

பிரான்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக Zinédine Zidaneஐ வரவேற்ற எம்பாப்பே!!

29 ஆடி 2026 புதன் 21:26 | பார்வைகள் : 2049


பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சினெதின் சிடான் 2026 ஜூலை 28, செவ்வாய்க்கிழமை, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிலியன் எம்பாப்பே, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் "Bienvenue chez toi" என்று அவரை வரவேற்றார்.

54 வயதான ஜசினெதின் சிடான், 14 ஆண்டுகள் பிரான்ஸ் அணியை வழிநடத்திய Didier Deschampsற்கு பதிலாக பொறுப்பேற்றுள்ளார். டெஷாம்ப்ஸின் பயிற்சியாளர் காலம் உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி நான்காவது இடத்தைப் பெற்றதன் மூலம் நிறைவடைந்தது.

இதற்கு முன்பு, உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கிலியன் எம்பாப்பே, திடியே டெஷாம்ப்ஸுக்கு நன்றி தெரிவித்து, பிரான்ஸ் அணியின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பை பாராட்டியிருந்தார்.

முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சினெதின் சிடான், இன்னும் கிலியன் எம்பாப்பேவுடன் பேசவில்லை என்றும், அவர் தற்போது ஓய்வெடுப்பது முக்கியம் என்றும் கூறினார். செப்டம்பர் மாதத்தில் எம்பாப்பே மற்றும் அனைத்து வீரர்களுடனும் கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்தார்.