சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்த நெய்மர் - முறியடிக்கப்படாத சாதனை
30 ஆடி 2026 வியாழன் 13:33 | பார்வைகள் : 451
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானவர் நெய்மர்.
பிரேசில் அணிக்காக 130 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ளார் மற்றும் 59 கோல்களுக்கு உதவியாக இருந்துள்ளார்.
இதன் மூலம், பிரேசில் கால்பந்து அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
2014 முதல் 2026 வரை தொடர்ச்சியாக 4 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற நெய்மர், 15 போட்டிகளில் 9 கோல்களை அடித்து, 4 தொடர்களிலும் கோல் அடித்த மிகச் சில வீரர்களில் ஒருவரானார்.
2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில், 5 முறை சாம்பியனான பிரேசில் அணி,.காலிறுதிக்கு முந்தைய சுற்றான 'ரவுண்ட் ஆஃப் 16' ஆட்டத்தில் நார்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
அவர் சர்வதேச போட்டியில் அறிமுகமான அதே மெட்லைஃப் ஸ்டேடியத்தில் தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக காயம் காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்த நெய்மரால், இந்த தொடரின் முதல் சில போட்டிகளிலும் அவரால் முழுமையாக விளையாட முடியாமல் போனது.
இந்நிலையில் தனது சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள நெய்மர், "தேசிய அணியுடனான எனது காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். நான் அங்கு வரலாறு படைத்தேன், அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் அங்கே நிறைய அனுபவங்களைப் பெற்றேன், என் இரத்தத்தையும் உயிரையும் கொடுத்தேன், மேலும் அந்த மஞ்சள் ஜெர்சிக்காக எப்போதும் போராடினேன். ஆனால், எனக்கு இனி அது வேண்டும் என்று தோன்றவில்லை" என தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், தனது Santos அணிக்காக விளையாட உள்ளார்.
நெய்மர் 2017 ஆம் ஆண்டில் பார்சிலோனாவிலிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மெயினுக்கு 222 மில்லியன் யூரோக்கு(இந்திய மதிப்பில் ரூ.2,432 கோடி) பரிமாற்றம் செய்யப்பட்டதே, தற்போது வரை சாதனை பரிமாற்றமாக உள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire