காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்தின் காவிரி நீர் பங்கை உறுதி செய்யும்; மத்திய அரசு
31 ஆடி 2026 வெள்ளி 06:16 | பார்வைகள் : 583
தமிழக அரசு மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் ஆட்சேபனைகள் மத்திய அரசின் கவனத்தில் உள்ளதாக, லோக்சபாவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத், லோக்சபாவில் டெல்டா விவசாயிகள், தமிழகத்தின் குடிநீர் உரிமையை பாதுகாக்கும் நோக்கில் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்த விளக்கம் வருமாறு:
கர்நாடக அரசு 2019ம் ஆண்டு சமர்ப்பித்த மேகதாது குடிநீர் மற்றும் சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்தின் அறிக்கை, காவிரி நீர் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் நடைமுறை வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு திருப்பி அனுப்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் காவிரி நீர் தொடர்பான 16.02.2018 ம் தேதி சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டுமானங்கள் மேற்கொள்ள கர்நாடக அரசு, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய கீழ்நிலை நீர்ப்பங்கீட்டு மாநிலங்களின் ஒப்புதலை கட்டாயம் பெற வேண்டும் என எங்கும் குறிப்பிடவில்லை.
கடந்த 2007 ம் ஆண்டு காவிரி நீர் விவகாரத் தீர்ப்பாய தீர்ப்பில் இடம் பெற்றுள்ள பிரிவு 18ஐ, சுப்ரீம் கோர்ட் தனது 16.02.2018ம் தேதியிட்ட தீர்ப்பில் ஏற்றுக்கொண்டு தீர்ப்பாய உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில் ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் உள்ள நீரை ஒழுங்குபடுத்தவும், அதன் பயனை அனுபவிக்கவும் உள்ள உரிமை, அதிகாரம் மற்றும் பொறுப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
அதே நேரத்தில் மேகதாது திட்டத்தால் காவிரி டெல்டா பகுதி, விவசாய பாசனம் மற்றும் பிற மாவட்டங்களின் குடிநீர் வழங்கல் பாதிக்கப்படும் என்ற தமிழக அரசு மற்றும் விவசாய அமைப்புகளின் ஆட்சேபனைகள் மத்திய அரசின் கவனத்தில் உள்ளது. எனவே, திட்டம் தொடர்பான அனைத்து பிரதிநிதித்துவங்களும் உரிய விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்படும் .
மேலும், தமிழகத்தின் சட்டப்பூர்வமான காவிரி நீர் பங்கை உறுதி செய்யும் வகையில், காவிரி நீர் மேலாண்மைதிட்டத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire