Vincennes மற்றும் Noisy-le-Grand இடையே RER A சேவை 16 நாட்கள் நிறுத்தம்!!
30 ஆடி 2026 வியாழன் 21:58 | பார்வைகள் : 1967
ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 23 வரை, RER A தொடருந்து சேவை Vincennes மற்றும் Noisy-le-Grand – Mont d'Est நிலையங்களுக்கு இடையே முழுமையாக நிறுத்தப்படும். இந்த காலத்தில் நான்கு நிலையங்களில் தொடருந்து சேவை இருக்காது. அதற்கு பதிலாக மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத்தைத் திட்டமிடுவது மிகவும் அவசியமாகும்.
இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக, RATP நிறுவனம் தொடருந்து பாதையின் மாற்று உபகரணங்களைப் புதுப்பித்தல், பழைய ஸ்லீப்பர்கள் (Traverses) மற்றும் பாதையைத் தாங்கும் கற்கள் (Ballast) ஆகியவற்றை மாற்றும் பணிகளை மேற்கொள்ளும்.
மேலும், Val-de-Fontenay நிலையத்தில் தொடருந்து பாதைகளின் கீழ் புதிய நடைபாதை சுரங்கமும் அமைக்கப்படும்.
இந்த 16 நாட்கள் முழுவதும் Val-de-Fontenay, Neuilly-Plaisance, Bry-sur-Marne மற்றும் Noisy-le-Grand – Mont d'Est ஆகிய நான்கு நிலையங்களில் எந்த தொடருந்தும் நிற்காது.
மூன்று மாற்றுப் பேருந்து சேவைகள்
பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக RATP மூன்று மாற்றுப் பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- சிவப்பு (Rouge) பேருந்து: Château de Vincennes முதல் Noisy-le-Grand – Mont d'Est வரை அனைத்து மூடப்பட்ட நிலையங்களிலும் நிற்கும். சுமார் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும்.
- பழுப்பு (Marron) பேருந்து: Nogent-sur-Marne மற்றும் Noisy-le-Grand – Mont d'Est இடையே நேரடி சேவையை வழங்கும்.
- பச்சை (Verte) பேருந்து: வார நாட்களில் காலை மற்றும் மாலை உச்ச நேரங்களில் மட்டும் Chelles-Gournay (RER E) மற்றும் Noisy-le-Grand – Mont d'Est இடையே இயக்கப்படும்.
மேலும், பயணிகள் 113, 114, 118, 120, 124, 206, 210, 306 மற்றும் 520 ஆகிய பேருந்து வழித்தடங்களையும் பயன்படுத்தலாம் என்று RATP அறிவுறுத்தியுள்ளது.
RER E – சிறந்த மாற்று
பேருந்துகளைத் தவிர்க்க விரும்பும் பயணிகளுக்கு RER E ரயில் சேவையைப் பயன்படுத்துமாறு RATP பரிந்துரைக்கிறது.
முடிந்தவரை இந்த காலப்பகுதியில் பயணத்தை ஒத்திவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியமாக பயணம் செய்ய வேண்டியவர்கள், கோடைக்காலப் பணிகள் நடைபெறும் காலத்திற்கான சிறப்பு பயண வழித்தட (itinéraire) கணிப்பானைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire