Paristamil Navigation Paristamil advert login

LPL 2026- சிக்ஸர்களை பறக்கவிட்ட இலங்கை வீரர்கள்..ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி

LPL 2026- சிக்ஸர்களை பறக்கவிட்ட இலங்கை வீரர்கள்..ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி

31 ஆடி 2026 வெள்ளி 12:52 | பார்வைகள் : 504


கண்டி ராயல்ஸ் அணிக்கு எதிரான LPL டி20 போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பல்லேகேலே மைதானத்தில் நடந்த LPL டி20 போட்டியில், ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ராயல்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணியில் கமில் மிஷாரா, அவிஷ்கா பெர்னான்டோ கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 95 ஓட்டங்கள் குவித்தது.

அவிஷ்கா பெர்னான்டோ 22 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட கமில் மிஷாரா (Kamil Mishara) 49 (26) ஓட்டங்களில் அவுட் ஆகி அரைசதத்தை தவறவிட்டார்.

அடுத்து வந்த இப்ராஹிம் (8), பனுக ராஜபக்சே (7) ஆகியோர் சொதப்ப, ஹிரோடோய் 21 ஓட்டங்கள் விளாசினார்.

அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய சமிந்து விக்ரமசிங்கே (Chamindu Wickramasinghe) 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 43 ஓட்டங்கள் விளாசினார்.

ஷாகிப் அல் ஹசன் 22 (16) ஓட்டங்களும், துனித் 16 (9) ஓட்டங்களும் விளாச, ஜாஃப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது.

மொயீன் அலி, வனிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், அஸிதா பெர்னாண்டோ மற்றும் ஜாகிர் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய கண்டி ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பவண் சந்தேஷ் 21 பந்துகளில் 48 ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்), லஹிரு உதரா 15 பந்துகளில் 30 ஓட்டங்களும் விளாசினர்.

ஷாஹின் அப்ரிடி 24 (14) ஓட்டங்களும், வனிந்து ஹசரங்கா 24 (12) ஓட்டங்களும், விஜய் ஷங்கர் 25 (21) ஓட்டங்களும் எடுத்தனர்.

துனித் வெல்லாலகே, ஷாகிப் அல் ஹசன் தலா 3 விக்கெட்டுகளும், தில்ஷன் மதுஷங்கா மற்றும் ஜகூர் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.