ஜி.வி.பிரகாஷை பாராட்டிய இயக்குநர் சீனு ராமசாமி… என்ன காரணம் தெரியுமா?
1 ஆவணி 2026 சனி 15:29 | பார்வைகள் : 529
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான சமீபத்திய பாடலை கேட்டு இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.இது தொடர்பாக சீனு ராமசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏதேச்சையாக என் கண்ணில் பட்ட பாட்டு எதிர்பார்க்கவே இல்லை. இது உள்ளத்தை ஏதோ செய்கிறது. ஜிவி பிரகாஷின் ஆத்மார்த்தமான இசையிலும் குரலிலும் வரிகளிலும் மிளிரும் 'மகுடம்' படத்தின் "கலங்காதே" பாடல்.
சூப்பர் குட் பிலிம்ஸ் அமரர் ஆர் பி சவுத்ரி அவர்கள் வழங்கும் இந்தத் திரைப்படத்தின் பாடலாசிரியர் கருணாகரன் படத்தின் இயக்குனர் ஹீரோ விஷால் உள்ளிட்ட அனைவருக்கும் இதன் வெற்றி 'மகுடம்' ஆகட்டும். வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார்.
விஷால் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘மகுடம்’. இந்தப் படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கலங்காதே’ பாடலை இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire