Paristamil Navigation Paristamil advert login

67 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்ற கேப்டன் - 183 ஓட்டங்களுக்கு சுருண்ட நெதர்லாந்து

67 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்ற கேப்டன் - 183 ஓட்டங்களுக்கு சுருண்ட நெதர்லாந்து

1 ஆவணி 2026 சனி 16:44 | பார்வைகள் : 585


நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.

நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் Utrecht-யில் நடந்து வருகிறது.

முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித், ஜாக் லயன் டக்அவுட் ஆகினர்.

பின்னர் மேக்ஸ் ஓ'டௌட் 23 ஓட்டங்களிலும், பாஸ் டி லீட் 27 ஓட்டங்களிலும் வெளியேற அணித்தலைவர் ஸ்கொட் எட்வர்ட்ஸ் நிலைத்து நின்று ஆடினார்.

மறுமுனையில் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 48.5 ஓவர்களில் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இறுதிவரை களத்தில் நின்ற ஸ்கொட் எட்வர்ட்ஸ் (Scott Edwards) 85 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்தார்.

ரூபென் ட்ரம்ப்பெல்மன், ஜேக் பிரஸ்ஸெல் தலா 3 விக்கெட்டுகளும், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 2 விக்கெட்டுகளும், எராஸ்மஸ் மற்றும் ஜேஜே ஸ்மித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.