ஷங்கரின் இயக்கத்தில் தனுஷ் நடிக்க மறுத்தாரா ?
2 ஆவணி 2026 ஞாயிறு 15:35 | பார்வைகள் : 441
ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட்டில் அமைந்துவிட்டதால் தொடர்ந்து அதிக பட்ஜெட் படங்களை இயக்கினார். காதலன், ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், எந்திரன், முதல்வர் உள்ளிட்ட பல படங்களையும் இயக்கினார்.
ஆனால், அவரின் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் தோல்வி அடைந்தது. எனவே, ஷங்கர் கடந்த ஒன்றரை வருடங்களாக எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. அதேநேரம், வேள் பாரி நாவலை 3 பாகங்களாக எடுக்க கதை, திரைக்கதையை அவர் எழுதி வைத்திருக்கிறார். ஆனால், அதில் பெரிய நடிகர்கள் நிறைய பேர் நடிக்கவேண்டும் என்பதால் ஹீரோக்கள் கிடைக்கவில்லை. அதோடு, தற்போது ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க எந்த நடிகரும் தயாரகவும் இல்லை.
எனவே, அதற்கு முன் ஒரு திரைப்படத்த இயக்கிவிடலாம் என யோசித்த ஷங்கர் தனுஷிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். ஆனால், ‘என்னால் இப்போதைக்கு முடியாது சார்’ என சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டாராம் தனுஷ். எனவே, வேறு ஹீரோவை தேடி வருகிறாராம் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்பட்ட ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆசைப்பட்டனர். ஆனால், 2 தோல்விகளை அவர் கொடுத்ததால் அவரின் நிலைமை இப்படி ஆகிவிட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire