மிருணாளினி ரவி ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிக்கிறாரா?
2 ஆவணி 2026 ஞாயிறு 15:55 | பார்வைகள் : 677
தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‛சூப்பர் டீலக்ஸ்" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மிருணாளினி ரவி. அடுத்து ‛சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ரோமியோ" ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட மிருணாளினி ரவி, ‛‛உன்னைக் காதலிப்பது என்பது என்னையே காதலிப்பதாகும். எல்லா பிரபஞ்சத்திலும் எல்லா காலத்திலும் நான் உன்னையே தேர்ந்தேடுப்பேன்"" என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த மகாவிஷ்ணு, சிறு வயதில் தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தற்போது ஆன்மிகப் பேச்சாளராக உருவெடுத்துள்ள மகாவிஷ்ணு, பல நிகழ்ச்சிகளில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire