தவா சிக்கன்
2 ஆவணி 2026 ஞாயிறு 16:04 | பார்வைகள் : 450
ஹோட்டல் சென்றால் அனைவரும் விரும்பி ஆர்டர் செய்யும் உணவுகளில் சிக்கன் கண்டிப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விதவிதமான சிக்கன் ரெசிபிகளை விரும்பி சாப்பிடுவார்கள். அதில் ஒன்றுதான் தவா சிக்கன்.
இந்த தவா சிக்கனை விரைவாகவும், எளிய செய்முறையிலும் நிமிடங்களில் செய்துவிடலாம். இந்த வார விடுமுறையில் உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சுவைக்க ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தவா சிக்கன் எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தவா சிக்கன் செய்முறையில், கோழி துண்டுகளைச் சேர்ப்பதற்கு முன், முதலில் எவற்றை வதக்க வேண்டும்?
நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு
மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள்
தக்காளி மற்றும் பச்சை மிளகாய்
கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி
தேவையான பொருட்கள் :
எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகள் - 500 கிராம் (தொடை பகுதி)
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 3/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலைகள், நறுக்கியது - 1 கப்
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
நீளமாக நறுக்கிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
அடுப்பில் தவா வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து குறைந்த தீயில் ஒரு நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.
பிறகு அதில் அலசி வைத்துள்ள கோழி துண்டுகளை சேர்த்து கோழியின் நிறம் மாறும் வரை 5 நிமிடங்களுக்கு அதிக வெப்பத்தில் நன்றாக வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீராக பொடி, கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிதமான தீயில் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் 3-4 நிமிடங்கள் தக்காளி மென்மையாகும் வரை சமைக்கவும்.
பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்து மூடி வைத்து 10 நிமிடம் குறைந்த தீயில் தக்காளி மென்மையாகும் வரை சமைத்து வறுத்து நுணுக்கிய கசூரி மேத்தியைச் சேர்த்து கலந்து 2 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் சமைக்கவும்.
கோழி வெந்தவுடன் நீளமாக நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கி எடுத்தால் ருசியான தவா சிக்கன் ஃப்ரை ரெடி...
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire