Paristamil Navigation Paristamil advert login

எகிப்து கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம்

எகிப்து கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம்

3 ஆவணி 2026 திங்கள் 15:14 | பார்வைகள் : 535


எகிப்து கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

இன்று 03.08.2026 அதிகாலை 5.4 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இடம்பெற்றுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் சூயஸ் (Suez) நகரிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாக எகிப்து அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதங்களோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு தகவலும் பதிவாகவில்லை.