Paristamil Navigation Paristamil advert login

ஆகஸ்ட் 3 முதல் 9 வரை போக்குவரத்து இடையூறுகள்!!

ஆகஸ்ட் 3 முதல் 9 வரை போக்குவரத்து இடையூறுகள்!!

3 ஆவணி 2026 திங்கள் 16:20 | பார்வைகள் : 1966


இந்த வாரத்தில் பரிஸ் மற்றும் Île-de-France பகுதியில் கோடைக்கால பராமரிப்பு மற்றும் நவீன மயமாக்கல் பணிகள் தீவிரமாக நடைபெறுவதால், மெட்ரோ, RER மற்றும் Transilien ரயில் சேவைகளில் பல மாற்றங்கள் அமுலில் உள்ளன. பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு RATP மற்றும் SNCF அறிவுறுத்தியுள்ளன. 

முக்கிய பாதிப்புகள்:

RER B:

  • Gare du Nord மற்றும் Bourg-la-Reine இடையே தொடருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
  • Charles-de-Gaulle விமான நிலையம் மற்றும் Mitry-Claye நோக்கி செல்லும் தொடருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.
  • மாற்று பேருந்துகள் மற்றும் மாற்று தொருந்து வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  • Gare du Nord நிலையத்தில் அதிக நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ 13:

  • Saint-Denis–Université மற்றும் La Fourche இடையே நவீனமயமாக்கல் பணிகளுக்காக சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
  • மாற்று பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. 

RER A:

  • Nation நிலையத்தில் தொடருந்து தற்காலிகமாக நிற்காது.
  • கோடை விடுமுறை கால அட்டவணை காரணமாக சில ரயில்கள் இயக்கப்படாது.

மெட்ரோ 4 மற்றும்  5:

  1. RER B மற்றும் RER D பணிகளால் இந்த வழித்தடங்களில் வழக்கத்தை விட அதிக கூட்டம் இருக்கலாம்.
  2. முடிந்தவரை மெட்ரோ Line 14 மற்றும் RER E பயன்படுத்துமாறு அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். 

பயணிகளுக்கான ஆலோசனைகள்:

  1. பயணத்திற்கு முன் RATP அல்லது SNCF செயலிகள் மூலம் நேர அட்டவணையைச் சரிபார்க்கவும்.
  2. கூடுதல் பயண நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும்.
  3. மாற்று பேருந்துகள் மற்றும் மாற்று ரயில் வழித்தடங்களை பயன்படுத்தத் தயாராக இருக்கவும்.
  4. அதிக நெரிசல் ஏற்படும் நிலையங்களில் முன்னதாகவே செல்வது நல்லது.