இலங்கையில் சமூக ஊடகப் பயனர்களை குறிவைக்கும் பாலியல் மிரட்டல் மூலம் பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரிப்பு
4 ஆவணி 2026 செவ்வாய் 12:09 | பார்வைகள் : 512
இலங்கையில் Facebook Messenger, Instagram, WhatsApp மற்றும் Telegram போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணப் பறிப்பு மோசடிகள் மீண்டும் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு அணி (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைய வாரங்களில் பலர் இது தொடர்பாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, இந்த மோசடிகளில் இந்தியாவைச் சேர்ந்த குழுக்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அதேவேளை, அண்மைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் பணத்தை இலங்கையிலுள்ள தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்புமாறு கூறப்பட்டுள்ளதால், இலங்கையர்களின் தொடர்பும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த மோசடி பொதுவாக இளம் பெண்ணின் Instagram கணக்கிலிருந்து "Hi" என்ற எளிய செய்தியுடன் தொடங்குகிறது. சில நாட்கள் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி WhatsApp காணொளி அழைப்பிற்கு அழைக்கின்றனர்.
அதன்பின், பாதிக்கப்பட்டவர்களை ஆடையின்றி தோன்றவோ அல்லது தனிப்பட்ட காட்சிகளில் ஈடுபடவோ தூண்டி, அதன் திரைப் படங்களை (Screenshots) பதிவு செய்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
ஆரம்பத்தில் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கோரப்படும் தொகை, பின்னர் இலட்சக்கணக்கான ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக SLCERT தெரிவித்துள்ளது.
குடும்பத்தினரையும் உறவினர்களையும் சமூக ஊடகங்களில் முன்கூட்டியே நண்பர்களாக இணைத்துக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதும் இந்த மோசடியின் புதிய யுக்தியாகும்.
எனவே, Messenger, Instagram, WhatsApp மற்றும் Telegram பயன்படுத்தும் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்கள் அல்லது புகைப்படங்களை பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக SLCERT அல்லது பொலிஸாரை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் SLCERT வலியுறுத்தியுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire