மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி வீண் - மேத்யூ ஷார்ட்டின் சரவெடி ஆட்டத்தில் வெல்ஷ் ஃபயர் வெற்றி
4 ஆவணி 2026 செவ்வாய் 15:19 | பார்வைகள் : 490
சௌதர்ன் பிரேவ் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் வெல்ஷ் ஃபயர் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கார்டிஃப்பில் நடந்த The Hundred போட்டியில் வெல்ஷ் ஃபயர் மற்றும் சௌதர்ன் பிரேவ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சௌதர்ன் பிரேவ் அணியில் ஜேமி ஸ்மித், பென் மெக்கின்னி டக்அவுட் ஆகினர்.
பின்னர் நிகில் 18 ஓட்டங்களில் வெளியேற, மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி காட்டினார். அவர் 39 பந்துகளில் 55 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 8 பவுண்டரிகள்) எடுக்க, சௌதர்ன் பிரேவ் 115 ஓட்டங்கள் சேர்த்தது. சாம் குக் 3 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா, மேத்யூ ஷார்ட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய வெல்ஷ் ஃபயர் அணியில் பிலிப் சால்ட் (4), ஜோ ரூட் (17), ரச்சின் ரவீந்திரா (0) மற்றும் ஜோர்டான் கொக்ஸ் (6) ஆகியோர் சொதப்பினர்.
எனினும், தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் (Matthew Short) கடைசிவரை களத்தில் நின்று 41 பந்துகளில் 60 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 6 பவுண்ரிகள்) விளாச, வெல்ஷ் ஃபயர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் ஜோர்டான் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire