Bonne Maman சிறிய ஜாம் போட்டில்கள் திரும்பப் பெறப்படுகின்றன!!
4 ஆவணி 2026 செவ்வாய் 20:48 | பார்வைகள் : 1914
ஜூன் 17 முதல் ஜூலை 13, 2026 வரை விற்பனை செய்யப்பட்ட சில Bonne Maman நிறுவனத்தின் 30 கிராம் ஸ்ட்ராபெரி ஜாம் சிறிய பாட்டில்கள், அவற்றில் மிகச் சிறிய கண்ணாடி துகள்கள் இருக்கக்கூடிய அபாயம் இருப்பதால், பிரான்ஸ் முழுவதும் திரும்பப் பெறப்படுகின்றன.

திரும்பப் பெறப்படும் பொருட்களின் விவரங்கள்:
- பொருள்: 30 கிராம் ஸ்ட்ராபெரி ஜாம் சிறிய பாட்டில்
- GTIN குறியீடு: 3045320070361
- தொகுதி எண்கள் (Lots): K154 மற்றும் K155
- குறைந்தபட்ச பயன்பாட்டு தேதி (DDM): 30 ஜூன் 2028
Rappel Conso அமைப்பின் தகவலின்படி, சிறிய கண்ணாடி துகள்களை விழுங்கினால் வாய், தொண்டை அல்லது செரிமான உறுப்புகளில் காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தப் பொருட்களை இனி பயன்படுத்தவோ அல்லது சாப்பிடவோ வேண்டாம். அவற்றை பாதுகாப்பாக அழித்துவிடுங்கள் அல்லது நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு மாற்றுப் பொருள் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire