விமானப் பயணிகளுக்கு எச்சரிக்கை – EasyJet ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்!!
5 ஆவணி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 1905
EasyJet விமான நிறுவனத்தில் பணியாற்றும் விமானப் பணியாளர்கள் ஆகஸ்ட் மாதத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான முன்னறிவிப்பை மூன்று தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ளன. இந்த வேலைநிறுத்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி புதன்கிழமை வரை அமுலில் இருக்கும் என UNPNC-CFDT தெரிவித்துள்ளது.
SNPNC-FO, UNAC-CFE-CGC மற்றும் UNPNC-CFDT ஆகிய மூன்று தொழிற்சங்கங்கள், EasyJet நிறுவனத்தின் விமானப் பணியாளர்களான விமானப் பணிப்பெண்கள் மற்றும் பணிப்பாளர்களின் பணிச்சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளன. பணிநேர அட்டவணைகளில் அடிக்கடி மாற்றம், கடைசி நேர மாற்றங்கள், கட்டாய பணிப்பயணங்கள் மற்றும் கடுமையான பணிச்சுழற்சிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் பல மாதங்களாக நிர்வாகத்திடம் எச்சரிக்கை விடுத்தும், போதுமான தீர்வு கிடைக்கவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வேலைநிறுத்தத்தால் பிரான்ஸ் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கோடை காலப் பயணங்கள் பாதிக்கப்படக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தின் முக்கிய போராட்ட நாட்களை 48 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. இதனிடையே, தொழிற்சங்கங்களின் முடிவால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக EasyJet தெரிவித்துள்ளது. செப்டெம்பரில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பயணிகளுக்கு முக்கியமான கோடை காலத்தில் வேலைநிறுத்த அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறு நிறுவனம் கோரியுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire