Paristamil Navigation Paristamil advert login

ஒரே ஏவுதலில் 23 செயற்கைக்கோள்கள்- சீனாவின் புதிய சாதனை

ஒரே ஏவுதலில் 23 செயற்கைக்கோள்கள்- சீனாவின் புதிய சாதனை

5 ஆவணி 2026 புதன் 12:50 | பார்வைகள் : 574


சீனா தனது மற்றுமொரு குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள் தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

சீனா நேரப்படி 04.08.2026 மாலை 4.52 மணியளவில், ஹைனான் வர்த்தக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து Long March-8A ஏவுகணை மூலம் இந்த செயற்கைக்கோள் தொகுதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இதன் மூலம், குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள்களின் 23ஆவது தொகுதி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, இந்த விண்வெளி நடவடிக்கை முழுமையாக வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.