அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் திரையரங்குகளில் வெளியாகிறதா?
5 ஆவணி 2026 புதன் 16:16 | பார்வைகள் : 597
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச கார் பந்தயங்களில் தீவிரமாக பங்கேற்று வரும் நடிகர் அஜித், துபாய், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு கவனம் பெற்றுள்ளார்.
அந்த அனுபவங்களையும், ரேசிங் உலகில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் மையமாகக் கொண்டு ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஆவணப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள நிலையில், ஷாலினி தனது கோல்டன் டிராபி பிலிம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த ஆவணப்படத்தில் பல தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர். இது ஆவணப்படம் என்பதால் வழக்கமான பாடல்கள் அல்லது பஞ்ச் வசனங்கள் இருக்காது; மாறாக அஜித்தின் ரேசிங் பயணமே மையமாக இருக்கும்.
முதலில் ஓடிடி வெளியீடு குறித்து பேசப்பட்ட நிலையில், தற்போது படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. புதிய போஸ்டருடன் “விரைவில் திரையரங்குகளில்” என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டதால், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire