தமிழக பொது பட்ஜெட்: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? விவரங்கள் வெளியீடு
6 ஆவணி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 457
தமிழக பொது பட்ஜெட்டில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? செய்யப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.தமிழக சட்டசபையில், 2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து பேசினார்.
இதில், திட்டங்கள் சார்ந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.இதன்படி, தற்போது நாடு முழுவதும் எதிர்கொண்டு வரும் சூப்பர் எல்-நினோ பாதிப்புகளை தமிழகத்தில் சமாளிக்க ஏதுவாக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக அரசு மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள்ரூ.2 ஆயிரம் கோடி நிதியுடன் வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உலக தர பயிற்சி - ரூ.5 கோடி .
பெண்கள், முதியோர்கள்மண்ணின் மகள் திட்டம் - ரூ.20 கோடி ஒதுக்கீடு
8 கிராம் தங்க நாணயம், அண்ணன் சீர்திட்டம் - ரூ.812 கோடி ஒதுக்கீடு
கருவுற்ற பெண்களுக்கு தாய் கேர் திட்டம் - ரூ.23 கோடி
நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் - ரூ.33 கோடி
12 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் - ரூ.6.6 கோடி .
கால்நடைகள்ரூ.57 கோடிக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
தீவன விதை வங்கிகள் & கிடங்குகள் - ரூ.6.7 கோடி
ரூ.122 கோடிக்கு கால்நடை மருத்துவ சேவைகள்
கால்நடைகள் காப்போம் திட்டம் - ரூ.31 கோடி ஒதுக்கீடு
கால்நடை மருத்துவ சேவைகள் ரூ.122 கோடி
வெற்றி ஆடுகள் வளர்ப்பு திட்டம் - 5 ஆடுகள் வழங்கப்படும்
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் - ரூ.110 கோடி ஒதுக்கீடு .
மீன்வளம்மீனவர் நலன் உதவித்தொகை திட்டம் - ரூ.135 கோடி
மீன்பிடி உதவித்தொகை ரூ.7,000 ஆக உயர்த்தப்படும் .
அரசு ஊழியர்கள்அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் - ரூ.838 கோடி
ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளுக்கு - ரூ.47,240 கோடி .
ஆன்மிகம்அடுத்த 5 வருடங்களில் 3000 கோவில்களில் திருப்பணிகள்
ஆன்மிக தலங்களில் ரூ.60 கோடியில் ஓய்வு இல்லங்கள்
மூத்த குடிமக்கள் புனித பயணம் - ரூ.20 கோடி
ஒகேனக்கல் காவிரி, மதுரை வைகை, பாபநாசம் தாமிரபரணியில் நதி சுற்றுலா .
மின்சார வாகனங்கள்பொது இடங்களில் 20 ஆயிரம் மின்சார வாகன (EV) சார்ஜ் நிலையங்கள் - ரூ.50 கோடி ஒதுக்கீடு
குடியிருப்பு பகுதிகளில் மின்சார வாகன (EV) சார்ஜ் மையங்கள் - ரூ.5 கோடி ஒதுக்கீடு
சென்னையில் 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்தம் .
வீடு, குடியிருப்புகள்அடிப்படை வசதிகளுடன் தரமான குடியிருப்புகள் - ரூ.1,253 கோடி
ரூ.3,108 கோடியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம்
அனைவருக்கும் தரமான வீடு - ரூ.1,253 கோடி நிதி ஒதுக்கீடு
நம்ம சாலை திட்டம் - ரூ.250 கோடி .
பொதுவான திட்டங்கள்
அயல்நாட்டு கல்வி உதவி தொகை திட்டம் - ரூ.131 கோடி ஒதுக்கீடு
அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டம் - ரூ.300 கோடி
அறிவகம் இந்தியாவின் முதல் ஏ.ஐ. (AI) நகரம் - ரூ.5 கோடி
அனைத்து இ-சேவை மையங்களும் 'இ-சேவை 2.0' ஆக மேம்படுத்தப்படும்.
ஆன்றோர் மேம்பாட்டு திட்டம் - ரூ.250 கோடி ஒதுக்கீடு .
ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் திட்டம் - ரூ.75 கோடி ஒதுக்கீடு
உலகத்தர நீதிமன்ற வளாகம் - ரூ. 1,375 கோடி
உணவு மற்றும் கலைத்திருவிழா திட்டம் - ரூ.20 கோடி
ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு திட்டம் - ரூ.2,117 கோடி
ஒதுக்கீடுகாமராசர் காலை உணவு திட்டம் - ரூ.710 கோடி ஒதுக்கீடு .
சென்னை மின் பகிர்மான திறன் ரூ.1,390 கோடியில் வலுப்படுத்தப்படும்.
திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் - ரூ.10 கோடி ஒதுக்கீடு
போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.7,675 கோடி மானியம்
நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதார பாதுகாப்பு திட்டம் - ரூ.23 கோடி
நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.134 கோடி ஒதுக்கீடு .
முதல்-அமைச்சரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் - ரூ.2,117 கோடி
வெற்றி வீடு திட்டம் அறிமுகம் ரூ.3,500 கோடி
14,790 நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கம் செய்யப்படும்.
3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு மாநில அரசு பரிந்துரை
2026-2027 ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் - ரூ.3,50,027 கோடி ஆகவும்,
திருத்தப்பட்ட பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,26,740 கோடியாகவும் உள்ளது
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire