முகத்தில் வெடித்த "Squishy" பொம்மை: 8 வயது சிறுவனுக்கு கடுமையான தீக்காயம்!!
5 ஆவணி 2026 புதன் 20:49 | பார்வைகள் : 2203
8 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த "Squishy" என்ற மென்மையான உணர்வு பொம்மை (un jouet sensoriel) திடீரென வெடித்து, அதன் உள்ளே இருந்த ஜெல் முகம் மற்றும் மார்பில் சிதறியதால் அவனுக்கு இரண்டாம் நிலை தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் Pas-de-Calais பகுதியில் நடந்தது. குழந்தையின் தாய் Nancy Lorio இந்த விபத்தை Facebook-ல் பகிர்ந்து, பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெடிப்புக்குப் பிறகு சிறுவனின் முகம் கடுமையாக வீங்கி, தோலில் ஒட்டியிருந்த ஜெல்லை அகற்றும்போது தோலும் உரிந்து வந்தது. பின்னர் சிறுவன் Lille நகரில் உள்ள தீக்காய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பொதுமயக்கத்தில் சிகிச்சை அளித்ததுடன், மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்களுக்கு தோல் மாற்று அறுவைச் சிகிச்சையும் தேவைப்படும் என்று தெரிவித்தனர்.
நுகர்வோர் அமைப்புகளின் தகவலின்படி, Squishy பொம்மைகள் சில நேரங்களில் கிழிந்து அல்லது வெடித்து, உள்ளே இருக்கும் ஜெல் தோல் மற்றும் கண்களில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக அதிக வெப்பத்தில் வைத்தாலோ அல்லது மிக்ரோனில் சூடாக்கினாலோ இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
இந்த பொம்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் CE பாதுகாப்புச் சான்றிதழ் இருந்தபோதிலும், அதன் உள்ளே உள்ள ஜெல்லின் இரசாயனத் தன்மை மற்றும் அமிலத்தன்மை குறித்து கவலைகள் எழுந்துள்ளன. எனவே, Squishy போன்ற பொம்மைகளை குழந்தைகள் பயன்படுத்தும்போது பெற்றோர் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், அவற்றை வெயில் அல்லது அதிக வெப்பத்தில் வைக்கக் கூடாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire