Paristamil Navigation Paristamil advert login

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தனுஷ்?

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தனுஷ்?

6 ஆவணி 2026 வியாழன் 16:44 | பார்வைகள் : 502


தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் நடிகர் தனுஷ், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து லப்பர் பந்து இயக்குநரின் புதிய படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘தமிழ் முருகன்’ உள்ளிட்ட பல படங்கள் அவரது கைவசம் உள்ளன.

இந்த நிலையில், தனுஷின் புதிய பாலிவுட் படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் படத்தை இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்குவார் என கூறப்படுகிறது. மேலும், படத்தில் நடிகை கரினா கபூர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையிலும், பன்சாலி தயாரிப்பு மற்றும் பிஎஸ் மித்ரன் இயக்கம் என்ற கூட்டணி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், பிஎஸ் மித்ரன் இயக்கிய ‘சர்தார் 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.