Paristamil Navigation Paristamil advert login

பட்ஜெட் உரை மீதான விவாதம்: சட்டசபையில் இன்று தொடக்கம்

பட்ஜெட் உரை மீதான விவாதம்: சட்டசபையில் இன்று தொடக்கம்

7 ஆவணி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 564


சட்டபையில் பட்ஜெட் உரைகள் மீது, இன்று முதல் விவாதம் தொடங்குவதால், பரபரப்பான காட்சிகள் அரங்கேறும் வாய்ப்புள்ளது.

தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பொது பட்ஜெட், வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் உரை மீது, இன்று முதல் விவாதம் தொடங்குகிறது.

தமிழக வெற்றிக்கழக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள், பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

இது தொடர்பாக, பட்ஜெட் விவாதத்தின் போது கேள்வி எழுப்ப, எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், சபையில் இன்று முதல் பரபரப்பான காட்சிகள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது, மேகதாது அணை பிரச்னை, எம்.எல். ஏ.,க்கள் குதிரை பேரம் உள்ளிட்டவை குறித்தும், காரசார விவாதங்கள் நடக்க வாய்ப்புள்ளது.