தேடப்படும் ரவுடியுடன் சிறப்பு புலனாய்வு குழு போலீசுக்கு தொடர்பு
7 ஆவணி 2026 வெள்ளி 06:14 | பார்வைகள் : 600
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், ரவுடி சம்பவம் செந்திலுடன், 44, இவ்வழக்கை விசாரித்து வந்த, சிறப்பு புலனாய்வு குழு போலீசாருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின், தமிழக தலைவராக இருந்த, ஆம்ஸ்ட்ராங், 52, 2024 ஜூலை 5ல், சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வந்தனர். இக்குழுவில், தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டராக இருந்த புஹாரி, மாதவரம் இன்ஸ்பெக்டராக இருந்த சரவணன் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான, ரவுடி திருவேங்கடம், 33, என்பவரை, புஹாரி, தற்காப்புக்காக 'என்கவுன்டரில்' சுட்டுக் கொன்றார். அந்த இடத்தில், புஹாரியுடன் இன்ஸ்பெக்டர் சரவணனும் பணியில் இருந்தார்.
இவர்கள் தான், தற்போது, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த, தொழில் அதிபர் அகி ல் குமாரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி, 45 லட்சம் ரூபாய் பறித்த புகாரில் சிக்கியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கில், பரங்கிமலை இன்ஸ்பெக்டரான புஹாரி கைதானார். வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தற்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள், ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக விசாரித்த போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், இரண்டாவது குற்றவாளியான, ரவுடி சம்பவம் செந்தில் என்பவருடன், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றிருந்த, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சில போலீசாரின் மொபைல் போன் தொடர்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, உணவுப் பொருள் டீலராக செயல்பட்ட நபர்கள் வாயிலாக, செந்திலுடன் அவர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இன்ஸ்பெக்டர் புஹாரியை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire