Paristamil Navigation Paristamil advert login

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் – Bison Futé எச்சரிக்கை!!

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் – Bison Futé எச்சரிக்கை!!

7 ஆவணி 2026 வெள்ளி 07:30 | பார்வைகள் : 1782


ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை  பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடினமாக இருக்கும் என Bison Futé எச்சரித்துள்ளது. அன்றைய தினம் புறப்படும் திசையில் போக்குவரத்து “செம்மஞ்சள்” எச்சரிக்கை நிலைக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக Nord, Grand-Ouest மற்றும் Auvergne-Rhône-Alpes பகுதிகளில் பெரிய நகரங்களில் இருந்து விடுமுறைக்காக மக்கள் வெளியேறுவதால் நெரிசல் ஏற்படும். திரும்பும் திசையில் Auvergne-Rhône-Alpes மற்றும் Arc méditerranéen பகுதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

மேலும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி சனிக்கிழமை நிலைமை மிகவும் மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் புறப்படும் மற்றும் திரும்பும் இரு திசைகளிலும் போக்குவரத்து “சிவப்பு” எச்சரிக்கை நிலையில் இருக்கும். கடலோரப் பகுதிகளான Atlantique, Méditerranée மற்றும் Auvergne-Rhône-Alpes நோக்கி பெருமளவில் மக்கள் பயணிப்பதால் கடும் வாகன நெரிசல் உருவாகும். A6 மற்றும் A10 நெடுஞ்சாலைகளில் காலை முதலே நெரிசல் தொடங்கி, நண்பகலுக்கு முன்பாக உச்சத்தை எட்டும் என Bison Futé தெரிவித்துள்ளது. பிற்பகல் நடுப்பகுதிக்குப் பின்னர் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை சுற்றுலா பகுதிகளில் இருந்து திரும்பும் வாகனங்களாலும் காலை முதலே côte atlantique, Arc méditerranéen மற்றும் Auvergne-Rhône-Alpes பகுதிகளில் நெரிசல் ஏற்படும்.

ஞாயிற்றுக்கிழமையும் போக்குவரத்து பாதிப்பு தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புறப்படும் திசையில் குறிப்பாக Sud-Ouest மற்றும் Auvergne-Rhône-Alpes பகுதிகள் மஞ்சள் எச்சரிக்கை நிலையில் இருக்கும். கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களை நோக்கி வாகனங்கள் அதிகளவில் செல்லும் என்பதால் போக்குவரத்து அடர்த்தியாக இருக்கும். திரும்பும் திசையில் Auvergne-Rhône-Alpes மற்றும் Arc méditerranéen பகுதிகளிலும் காலை முதலே வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். விடுமுறைப் பயணிகள் வெள்ளி முதல் ஞாயிறு வரை பயண நேரத்தைத் திட்டமிட்டு, அதிக நெரிசல் ஏற்படும் நேரங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.