அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் திடீர் கைது
7 ஆவணி 2026 வெள்ளி 10:32 | பார்வைகள் : 580
அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தீவிர குடியேற்ற கொள்கையின் விளைவாக, பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு குடியேற்ற பாதுகாப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், பலர் குடியேற்ற காவல்துறையின் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து எல்லையில் சேவை செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரையே கைது செய்து வெளியனுப்புவது, அமெரிக்க வீரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் மன உளைச்சலையும் உருவாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கும் வீரர்களின் மன உறுதிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire