மரணத்தை தேடும் சாகசம் - மெட்ரோ கூரை மீது ஏறி பயணித்த இளைஞர்!!

மரணத்தை தேடும் சாகசம் - மெட்ரோ கூரை மீது ஏறி பயணித்த இளைஞர்!!

13 புரட்டாசி 2026 ஞாயிறு 14:10 | பார்வைகள் : 2130


மெட்ரோ தொடருந்து கூரை மீது ஏறி பயணிக்கும் ஆபத்தான ‘train-surfing’ சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வியாழக்கிழமை, Bir-Hakeim பாலத்தில், 6ஆம் இலக்க மெட்ரோ தொடருந்தின் கூரை மீது ஏறிய இளைஞர் ஒருவர், தனது கைத்தொலைபேசியில் அந்த காட்சியைப் பதிவு செய்தபடி தொடருந்தின் மீது நடந்து சென்றுள்ளார். இந்த காட்சியைப் பார்த்த சுற்றுலாப் பயணிகளும் பரிஸ் நகர மக்களும் அதிர்ச்சியடைந்தனர். 

இந்த ஆபத்தான செயல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில், Île-de-France பிராந்தியத் தலைவரும் Île-de-France Mobilités தலைவருமான Valérie Pécresse, இதனை கடுமையாகக் கண்டித்துள்ளார். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தச் செயல் முற்றிலும் பொறுப்பற்றது என அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ள போதிலும், இந்த ஆபத்தான நடைமுறையை முற்றிலும் கட்டுப்படுத்துவது இன்னும் சவாலாகவே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

Bir-Hakeim பாலம் ஏற்கனவே இதுபோன்ற ஆபத்தான சம்பவங்களுக்கு சாட்சியாகியுள்ளது. 2020ஆம் ஆண்டில், Père Noël வேடமணிந்த இருவர் 6ஆம் இலக்க மெட்ரோ தொடருந்தின் கூரை மீது ஏறியிருந்தனர். அப்போது RATP காவல்துறையில் புகார் அளித்திருந்தது. தற்போதைய சம்பவத்திலும் இளைஞர் ஒருவர் தீவிர ஆபத்தை பொருட்படுத்தாமல் தொடருந்தின் கூரை மீது ஏறியிருப்பது, இத்தகைய செயல்களின் உயிருக்கு ஆபத்தான தன்மை குறித்து மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து படிக்க