2 தொகுதி இடைத்தேர்தல்: த.வெ.க.,வுக்கு பாடம் புகட்டணும் – உதயநிதி

2 தொகுதி இடைத்தேர்தல்: த.வெ.க.,வுக்கு பாடம் புகட்டணும் – உதயநிதி

14 புரட்டாசி 2026 திங்கள் 09:12 | பார்வைகள் : 222


“இடைத்தேர்தலில் தி.மு.க., பெறும் வெற்றி, த.வெ.க., ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமைய வேண்டும்,” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்.

சென்னை வேளச்சேரி பகுதி தி.மு.க., நிர்வாகியின் திருமணம், உதயநிதி தலைமையில் நேற்று நடைபெற்றது.

திருமண விழாவில் உதயநிதி பேசியதாவது:

தி.மு.க., பல்வேறு வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், சிறப்பான எதிர்க்கட்சியாக மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு நிலவுகிறது. சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த ஆட்சியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும், அவற்றின் பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து கேள்வி எழுப்பினால், முதல்வரால் பதில் அளிக்க முடியவில்லை.

அடுத்த கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்ததன் காரணமாக, இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலில் தி.மு.க., பெறும் வெற்றி, இந்த ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமைய வேண்டும்.

இதற்காக தி.மு.க.,வினர் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். இடைத்தேர்தலில் தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

தொடர்ந்து படிக்க