பிலிப்ஸ், ஹோப், ஹெட்மையர் சொதப்பல் - 99 ஓட்டங்களுக்கு சுருண்டு கயானா தோல்வி
14 புரட்டாசி 2026 திங்கள் 12:48 | பார்வைகள் : 186
CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியர்ஸை வீழ்த்தியது.
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கரீபியன் லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2026 CPL 35வது போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் 18.1 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 24 ஓட்டங்களும், ரோமரியோ ஷெப்பர்ட் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
கஸன்பர் மற்றும் லேய்ன் தலா 3 விக்கெட்டுகளும், ஜார்ஜ் லிண்டே 2 விக்கெட்டுகளும், ரூதர்போர்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ஓட்டங்கள் (14.5 ஓவர்கள்) எடுத்து வெற்றி பெற்றது.
பிரண்டன் கிங் (Brandon King) ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களும், சட்ராக் டெஸ்கார்ட் 32 (20) ஓட்டங்களும் எடுத்தனர்.
மெஹிதி ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளும், வீராசாமி பெருமாள் மற்றும் இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.



