RER B, C பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு; Saint-Michel மெட்ரோ நிலையம் 3 மாதங்களுக்கு மூடல்!!

RER B, C பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு; Saint-Michel மெட்ரோ நிலையம் 3 மாதங்களுக்கு மூடல்!!

14 புரட்டாசி 2026 திங்கள் 17:01 | பார்வைகள் : 1353


மெட்ரோ 4ஆம் இலக்க பாதையின் Saint-Michel நிலையம் இன்று திங்கட்கிழமை செப்டம்பர் மாதம் 14 திகதி முதல் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வரை சுமார் 3 மாதங்களுக்கு மூடப்படுகிறது. இதனால் இந்தக் காலப்பகுதியில் மெட்ரோ 4ஆம் இலக்க தொடருந்துகள் Saint-Michel நிலையத்தில் நிற்காமல் கடந்து செல்லும். இந்த நிலையம் Île de la Cité மற்றும் Quartier Latin பகுதிகளுக்குச் செல்வதற்கும் RER B, RER C தொடருந்துகளுடன் இணைவதற்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடப் பராமரிப்பு பணிகளுக்காக இந்த நீண்டகால மூடல் மேற்கொள்ளப்படுவதாக RATP தெரிவித்துள்ளது. குறிப்பாக நிலையத்திற்குள் ஏற்படும் நீர்க்கசிவுகளைச் சரிசெய்தல், மேலும் இரண்டு தானியங்கி நகரும் படிக்கட்டுகளை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் பயணிகள் மாற்று நிலையங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Saint-Michel நிலையத்திற்குப் பதிலாக பயணிகள் Cité அல்லது Odéon நிலையங்களில் இறங்கி, அங்கிருந்து சுமார் 6 நிமிடங்கள் நடந்து Saint-Michel பகுதிக்குச் செல்லலாம். அதேவேளை, RER B மற்றும் RER C சேவைகளுக்கான Saint-Michel நிலையம் திறந்தே இருக்கும். முன்னதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 6 திகதி முதல் 24ஆம் திகதி வரை, முக்கிய நவீனமயமாக்கல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக மெட்ரோ 4ஆம் இலக்க பாதையில் Les Halles முதல் Montparnasse-Bienvenüe வரையிலான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படிக்க