ஆபாசமாக பேசுவது தான் திமுகவின் டிஎன்ஏ: அமைச்சர் ரமேஷ்

ஆபாசமாக பேசுவது தான் திமுகவின் டிஎன்ஏ: அமைச்சர் ரமேஷ்

15 புரட்டாசி 2026 செவ்வாய் 09:41 | பார்வைகள் : 172


ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசுவது தான் திமுகவின் டிஎன்ஏ என அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

**இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:**

மழை நின்றாலும் தூவானம் விடுவதில்லை என்பது போல, கடந்த ஆட்சியில் ஏற்பட்ட சீர்கேடுகள் தொடர்ந்து வருகின்றன. அந்த ஆட்சியில் இருந்த சீர்கேடுகளை தற்போது சரி செய்து வருகிறோம். நிச்சயம் அனைத்தையும் மாற்றுவோம்.

ஆபாசமாகவும், அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவது திமுகவின் டிஎன்ஏவிலேயே உள்ளது. அவர்கள் ஆபாசமாக பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம். அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் குறித்து அவர்கள் ஆபாசமாக பேசி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசி வருகிறார்.

வீட்டில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எங்கள் ஆட்சியை குறைகூறும் பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?

இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க