இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெல்லும்: இபிஎஸ் நம்பிக்கை
15 புரட்டாசி 2026 செவ்வாய் 14:10 | பார்வைகள் : 190
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும் ஏற்கனவே அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகள். மேலும், அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளாகவும் அவை உள்ளன. எனவே, இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், சென்னை திரும்பிய பிறகு, அவர் மேற்கொண்ட பயணம் தொடர்பான முழு விவரமும் தெரிய வரும்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின்வெட்டு காரணமாக கொசுக்கடியில் பொதுமக்களும், படிக்க முடியாமல் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.



