மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் - அரசுக்கு எதிராக களமிறங்கும் ஊழியர்கள்!!

மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் - அரசுக்கு எதிராக களமிறங்கும் ஊழியர்கள்!!

15 புரட்டாசி 2026 செவ்வாய் 07:36 | பார்வைகள் : 1953


கடுமையான வெப்ப அலை மற்றும் கோடை காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னர், பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்தவர்கள் இன்று செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர். மின்சாரம் மற்றும் எரிவாயு ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

மின்சாரம் மற்றும் எரிவாயு துறையைச் சேர்ந்த ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சலுகை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை பெருமளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 

இதேவேளை, தீயணைப்பு வீரர்கள், செவிலியர்கள், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அமைப்புகள், பெண்கள் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகளும் Bercy-யில் உள்ள பொருளாதார அமைச்சகத்தின் முன்பாக ஒன்றுகூடி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கூடுதல் நிதி மற்றும் வளங்களை கோருகின்றனர்.

மறுபுறம், எதிர்வரும் அரசாங்க வரவு-செலவுத் திட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். Alliance தொழிற்சங்கம், காவல்துறைக்கு தேவையான நிதி மற்றும் வளங்களை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளது. 

இதேபோன்று, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையினரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படாதது, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பணிச்சூழல் மோசமடைந்துள்ளமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து படிக்க