கொங்கோ பாடசாலையில் பயங்கர தீ விபத்து மாணவர்கள் உட்பட 26 பேர் பலி

கொங்கோ பாடசாலையில் பயங்கர தீ விபத்து மாணவர்கள் உட்பட 26 பேர் பலி

15 புரட்டாசி 2026 செவ்வாய் 08:21 | பார்வைகள் : 256


மத்திய கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 23  மாணவர்கள் உட்பட 26 பேர்  உயிரிழந்துள்ளனர்.

தெற்கு கிவு மாகாணத்தில் புகாவு நகரில் சிம்பண்டா பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பாடசாலையில் கடந்த வியாழக்கிழமை காலை 9  மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இத்தீயில் சிக்கி 30க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததோடு, 19 மாணவியரும் 4 மாணவர்களும் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீ பரவியதற்கான காரணம் குறித்து பொலிஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

தொடர்ந்து படிக்க