La Courneuve பகுதியில் கொடூர தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் கைது!!

La Courneuve பகுதியில் கொடூர தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் கைது!!

15 புரட்டாசி 2026 செவ்வாய் 14:03 | பார்வைகள் : 3187


La Courneuve பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குழுவொன்றால் சரமாரியாக தாக்கப்பட்ட அவர், பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றதாக துணை அரச சட்டத்தரணி Pierre Fermantel தெரிவித்துள்ளார். முதலில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதில் ஒருவர் குண்டு பாய்ந்து காயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் பின்னர் காரொன்றில் தஞ்சமடைந்த நிலையில், அந்த காரில் இருந்தவர்களை ஒரு குழுவினர் தாக்கியுள்ளனர். காரில் பயணித்தவர்களில் ஒருவரான உயிரிழந்த நபர், அந்தக் குழுவினரால் பலமுறை தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உயிர் பிழைக்க முடியாமல் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பில் “வேண்டுமென்றே கொலை செய்தல்” என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நான்கு சந்தேகநபர்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்கான முழுமையான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பங்கு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படிக்க