முதல்வர் விஜய்யை அவமதித்து பேச்சு: தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.பி. மீது வழக்கு

முதல்வர் விஜய்யை அவமதித்து பேச்சு: தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.பி. மீது வழக்கு

16 புரட்டாசி 2026 புதன் 14:00 | பார்வைகள் : 343


கள்ளக்குறிச்சியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் விஜயை அவமதிக்கும் வகையில் பேசியதாக ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தி.மு.க. எம்.பி. ராசா மற்றும் எம்.எல்.ஏ. சேகர்பாபு மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சட்டசபையில் முதல்வர் விஜய், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிசா சட்டத்தின் கீழ் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து குறிப்பிட்டார். அப்போது அவரது உடல் மொழி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் அரசியல் தியாகத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக கூறி, தி.மு.க.வினர் கடந்த 12-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், முதல்வர் விஜய் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் குறித்து தரம் தாழ்ந்து அவமதிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாக த.வெ.க. சார்பில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் விஜயை அவமதித்தல், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், தி.மு.க. எம்.பி. ராசா மற்றும் எம்.எல்.ஏ. சேகர்பாபு ஆகியோர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

தொடர்ந்து படிக்க