Saint-Denis நகரில் அதிர்ச்சி சம்பவம்: துப்பாக்கியுடன் நபர் கைது!!

Saint-Denis நகரில் அதிர்ச்சி சம்பவம்: துப்பாக்கியுடன் நபர் கைது!!

16 புரட்டாசி 2026 புதன் 08:49 | பார்வைகள் : 1646


Saint-Denis நகரின் மையப் பகுதியில் உள்ள Rue Dalmas பகுதியில் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 58 வயதுடைய ஒருவர் துப்பாக்கியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார். கையில் துப்பாக்கியை ஏந்தியபடி, வீதியில் சென்றவர்களை நோக்கி  LFI கட்சிக்கு வாக்களிப்பவர்களை சுடுவேன் என மிரட்டியதாக விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், Saint-Denis நகரின் LFI மேயரான Bally Bagayokoவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்றும் அந்த நபர் பொதுமக்களிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி தங்களைக் குறிவைத்து காட்டப்பட்டதால் அப்பகுதியில் இருந்தவர்கள் கடும் அச்சமடைந்தனர். Bally Bagayoko கடந்த மார்ச் மாதம் LFI சார்பில் முதல் சுற்றிலேயே மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த 58 வயது நபரை கைது செய்தனர். அவர் வைத்திருந்த துப்பாக்கி குண்டுகள் இல்லாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவருக்கு பின்னர் மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ந்து படிக்க