ஆலு பரோட்டா

ஆலு பரோட்டா

16 புரட்டாசி 2026 புதன் 15:27 | பார்வைகள் : 227


சுவை நிறைந்த இந்த மிருதுவான பஞ்சாபி ஆலு பரோட்டாவை நீங்கள் காலை மற்றும் இரவு உணவாக எடுத்து கொள்ளலாம். மேலும் காலை உணவிற்கு விரைவாகவும் சுவையாகவும் செய்ய விரும்பினால் இந்த ஆலு பரோட்டா சரியான தேர்வு ஆகும்.அந்தவகையில் எளிய செய்முறையில் மிருதுவான ஆலு பரோட்டாவை வீட்டிலேயே மிக சுவையாக எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - தேவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு போட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்தி நன்றாக பிசைந்து அதன் மேல் எண்ணெய் தடவி பத்து பதினைந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.பின்னர் உருளைக் கிழங்கை வேகவைத்து அதன் தோலை நீக்கி ஒரு பௌலில் போட்டு நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஆம்சூர் பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவில் இருந்து கொஞ்சம் பெரிய உருண்டையாக எடுத்து தேய்த்து கொள்ளுங்கள்.பின்னர் அதில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மூடி பரோட்டாவை கொஞ்சம் மெலிதாக தேய்த்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தேவையென்றால் நெய் தடவி தேய்த்து வைத்துள்ள ஆலு பரோட்டாவை போட்டு கொள்ளுங்கள்.

பரோட்டா ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு நெய் தடவி வேகவைத்து எடுத்தால் மிகவும் சுவையான, மிருதுவான ஆலு பரோட்டா சாப்பிட ரெடி...

தொடர்ந்து படிக்க