8 மணி நேர சோதனை - அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
17 புரட்டாசி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 328
தனது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
அன்பில் மகேஷின் வீட்டில் இன்று காலை முதல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில், இதுகுறித்து அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
**8 மணி நேரம் சோதனை**
அப்போது அவர் கூறுகையில், “காலை முதல் சுமார் 8 மணி நேரமாக எனது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். எனது அனைத்து கோப்புகள் மற்றும் வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தேன்” என்றார்.
**அரசியல் காழ்ப்புணர்ச்சி**
ஆளுங்கட்சியை விமர்சித்ததன் காரணமாகவே தனது வீட்டில் சோதனை நடைபெற்றதாக அன்பில் மகேஷ் குற்றம்சாட்டினார்.
“அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும், அரசியல் மடைமாற்றத்திற்காகவும் எனது வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
**18-ம் தேதி விசாரணை**
விசாரணைக்காக வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அன்பில் மகேஷ் கூறினார்.
மேலும், “எதிர்த்து பேசினால் அடுத்த நிமிடம் ரெய்டு அடிப்பதா? இந்த மாதிரி சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜரானபின் நேராக தாராபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். என்ன பொய் வழக்கு போட்டாலும் நீதிமன்றத்தை நாடி நீதியை நிலைநாட்டுவோம்” என்றார்.



