விஜய் சேதுபதி பேசியது அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும் - சீமான்

விஜய் சேதுபதி பேசியது அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும் - சீமான்

17 புரட்டாசி 2026 வியாழன் 08:50 | பார்வைகள் : 493


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“அரசியல் தெரிந்தவர்கள், அரசியல் தெரிந்தவர்களிடம் பேசலாம். ஆனால், அவதூறு பேசுபவர்களிடம் எதுவும் பேச முடியாது.

நடிகர் விஜய் சேதுபதி கூறிய கருத்து அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் அது பொருந்தாதா? அவர் கூறியது ஒரு பொதுவான கருத்து.

இந்த கருத்தை ‘வையத் தலைமை கொள்’ என்ற புத்தகத்தில் வெ. இறையன்பு எழுதியுள்ளார். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உலகம் முழுவதும் இருக்கும் கோட்பாட்டை அவர் அதில் எழுதியுள்ளார். அதையே விஜய் சேதுபதி பதிவு செய்துள்ளார்.

அவர் கூறிய பொதுவான கருத்தை ஒருவருடன் பொருத்திப் பார்த்து பிரச்சினை செய்வது அவசியமற்றது. நீங்கள் ஏன் அந்த கருத்தை உங்களைப் பற்றிக் கூறியதாக நினைத்துக் கொள்ள வேண்டும்? அப்படியென்றால், அவர் கூறியதுபோல் பிரச்சினைகளை கண்டு ஓடுபவர் தானா?”

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

தொடர்ந்து படிக்க