மெக்கா நகரம் மீது டிரோன் தாக்குதல்: இந்தியா கண்டனம்

மெக்கா நகரம் மீது டிரோன் தாக்குதல்: இந்தியா கண்டனம்

17 புரட்டாசி 2026 வியாழன் 11:57 | பார்வைகள் : 213


சவுதி அரேபியாவின் மெக்கா நகரை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

மெக்கா நகரை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றனர். எனினும், மெக்காவின் வான்வெளிக்குள் அந்த டிரோன் நுழைவதற்கு முன்பாகவே சவுதி அரேபிய வான் பாதுகாப்புப் படையினர் அதை இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். இதன் மூலம் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

மெக்கா அருகே டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் ஆழ்ந்த கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் இறையாண்மை மிக்க பகுதிகளில் தாக்குதல் நடத்துவதையும், அப்பாவி மக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் இந்தியா கண்டிப்பதாக மீண்டும் உறுதி செய்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இடமாக மெக்கா விளங்குகிறது. அத்தகைய நகருக்கு அருகே தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் விரைவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் திரும்பும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க