ரூ.15,300 கோடி முதலீடு; விஜய்யின் லண்டன் பயணம் வெற்றி

ரூ.15,300 கோடி முதலீடு; விஜய்யின் லண்டன் பயணம் வெற்றி

18 புரட்டாசி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 225


தமிழகத்தை உலகின் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக உயர்த்தும் நோக்கில் முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் விஜய் இன்று (செப். 17) காலை சென்னை திரும்பினார். இந்தப் பயணம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தை உலகின் முன்னணி முதலீடு மற்றும் வளர்ச்சி மையமாக உயர்த்தும் நோக்கில் முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் அமைந்தது. விஜய்யின் இங்கிலாந்து பயணம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு ஈர்ப்பில் மைல்கல்லாக அமைந்துள்ளது.

முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தும் வகையில் வெளிநாட்டு பயணங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். லண்டன் பயணத்தின்போது முதல்வர் விஜய்க்கு நல்லாதரவு அளித்த அந்நாட்டில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

தொடர்ந்து படிக்க