வறுமையில் இருந்து 25 கோடி பேர் மீட்டவர் பிரதமர் மோடி: எல்.முருகன் பெருமிதம்
18 புரட்டாசி 2026 வெள்ளி 06:17 | பார்வைகள் : 189
கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 76வது பிறந்த நாள் நாடு முழுவதும் செப். 17 கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்த ஆண்டு மோடியின் பிறந்த நாளை ஆசிர்வாத தீபம் ஏற்றி கொண்டாடினர்.
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலக வளாகத்தில் ஆசிர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் கவர்னர் தமிழிசை, ஜவுளித் தொழில் வர்த்தகர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் தீபம் ஏற்றினர்.
பின்னர் எல்.முருகன் பேசியதாவது:
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, சென்னையில் ஓடும் கூவம் நதியைப் போல மாசடைந்திருந்த சபர்மதி நதியைத் தூய்மைப்படுத்தி, மக்களுக்கு குடிநீராக வழங்கினார். நர்மதா அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்தி, பல கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்தவர் மோடி.
இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2047ல் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை மோடி நிச்சயம் நனவாக்குவார். பிரதமர் மோடி நூறாண்டு வாழ வேண்டும் என்பதற்காக ஆசிர்வாத தீபம் ஏற்றுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.



