திருப்பரங்குன்றம் தீபம்: தீர்ப்புக்குப் பின் பாருங்கள் - அமைச்சர் ரமேஷ்

திருப்பரங்குன்றம் தீபம்: தீர்ப்புக்குப் பின் பாருங்கள் - அமைச்சர் ரமேஷ்

18 புரட்டாசி 2026 வெள்ளி 07:23 | பார்வைகள் : 222


திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு பாருங்கள் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறினார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டி:

கோவில்களில் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருந்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்களுக்கு நீதிமன்ற அனுமதியுடன், நன்கொடையாளர்கள் விரும்பி யானைகளை வழங்குகின்றனர். யானைகள் சிறப்பாக கண்காணிக்கப்பட்டு, பாகன்களால் வளர்க்கப்படுகின்றன.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை; அது கொண்டாட்டம். இதுகுறித்து கவலைப்பட வேண்டாம். மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்த பிறகு பாருங்கள்.

இடைத்தேர்தல்களில் த.வெ.க., நிச்சயம் வெற்றி பெறும். நாங்கள் ஜெயிப்போமா, 'டிபாசிட்' வாங்குவோமா என்றெல்லாம் பேசினர். ஆனால், வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம்.

எங்கள் கட்சியின் கொள்கை விளக்க மாநாடு நடந்தபோதே, 'ஈ.வெ.ரா.,வின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை' என தைரியமாகக் கூறியவர் முதல்வர் விஜய். அவருக்கு எல்லா மதமும், எல்லா மக்களும் ஒன்றுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து படிக்க