மதுபான கொள்முதலில் பாரபட்சம் இல்லை; அமைச்சர் விக்னேஷ் உறுதி

மதுபான கொள்முதலில் பாரபட்சம் இல்லை; அமைச்சர் விக்னேஷ் உறுதி

18 புரட்டாசி 2026 வெள்ளி 08:26 | பார்வைகள் : 178


மதுபான கொள்முதலில் எந்தவித பாரபட்சமும் இல்லை என, மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

கோவையில் அவர் அளித்த பேட்டி:

மதுபான கொள்முதலில் தி.மு.க., - அ.தி.மு.க., சார்ந்த ஆலைகள் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி, 11 நிறுவனங்களிடம் இருந்தும் சமமாக கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த திராவிட ஆட்சிகளில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, இத்துறையை ஊழல் நிறைந்த துறையாக வைத்திருந்தனர்.

டாஸ்மாக் கடைகள் முழுமையாக சரியான நடைமுறைக்கு வந்த பிறகு, எப்.எல்.2 கடைகள் மீது கவனம் செலுத்தப்படும். 'பார்'களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், விரைவில் வெளியாக உள்ள பார் டெண்டர்களில் உணவகம் நடத்திக்கொள்ளும் யோசனையும் பரிசீலனையில் உள்ளது.

மது பாட்டிலுக்கு கூடுதல் விலை வசூலிக்கும் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, டாஸ்மாக் ஊழியர்கள் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை தொடரும்.

10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டிய காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், 4,000 டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் அமைப்பதற்கான டெண்டர் வரும் 5ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க