இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

18 புரட்டாசி 2026 வெள்ளி 11:35 | பார்வைகள் : 173


இந்தியா மீது உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

**டில்லி யசோபூமி கருத்தரங்கு மையத்தில் செமிகான் மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:**

இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. இந்தியா மீது உலக நாடுகளின் நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களை எடுத்துக்கொண்டால், இந்தியா எந்த திசையில் செல்கிறது, எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பதற்கான பாதை நமக்கு கிடைக்கும்.

சரக்கு ரயில்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட 3,000 கிலோ மீட்டர் பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நான் கடந்த 10 நாட்களைப் பற்றியும், கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பற்றியும் மட்டும் பேசவில்லை. இது நாடு முழுவதும் வேகத்தை துரிதப்படுத்துவதுடன், தளவாடங்களை மேம்படுத்தவும், உற்பத்திக்கு புதிய பலத்தை அளிக்கவும் உதவும்.

இந்தியாவில் நடைபெறும் ஐந்தாவது செமிகான் மாநாடு இதுவாகும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள விருந்தினர்களுக்கும் எனது சிறப்பு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது பாரம்பரியத்தில் கடவுள் விஸ்வகர்மா உருவாக்கம் மற்றும் கட்டுமானத்திற்கான அடையாளமாக அறியப்படுகிறார். இன்று பிரதமர் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம் வாய்ந்த கட்டுமானங்களும், மறுபக்கம் 21ம் நூற்றாண்டுக்கான தொழில்நுட்பமும் கொள்கையும் உள்ளன. தன்னிறைவு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நோக்கத்தின் பின்னணியில் இது உத்வேகமாகவும் உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
 

தொடர்ந்து படிக்க